2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உள்ளூ​ர் நீதித்துறைக்கு ஒரு மைல்கல்லான நாளாகும்

Editorial   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூ​ர் நீதித்துறைக்கு ஒரு மைல்கல்லான நாளாகும்

​நீதிமன்றங்களிலும் வைத்தியரிடமும் ‘பொய்’ கூடாதென கூறுவதை நாமெல்லாம் ​கேள்விபட்டிருக்கின்றோம். வைத்தியரிடம் பொய் சொன்னால் உயிருக்கு ஆபத்து, நீதிமன்றத்தில் பொய் சொன்னால் வாழ்க்கைக்கு ஆபத்தாகும். இவற்றில் சில எழுந்தமானமாகவே நடக்கிறது. பொய் சொல்லி சிக்கிக்கொள்ளதவர்கள் பலருலர்.

சில வழக்குகளின் தீர்ப்பு நாள், பொன் எழுத்துகளால் பொறிக்கவேண்டியதாக இருக்கும். அதேபோல, 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்த நாளும் பொன்​ எழுத்தால்தான் பொறிக்கவேண்டும். ஏனெனில், 40 வருடங்களின் பின்னர், இவ்வாறானதொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் அடங்களாக, 20 நீதியரசர்களுக்கான நியமனங்களை, நேற்றுமுன்தினம் (01) வழங்கியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, “உள்ளூ​ர் நீதித்துறைக்கு ஒரு மைல்” எனத் தெரிவித்திருந்தார்.

நீதித்துறைக்குள் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவே கடந்தகாலங்களில் பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால்,  நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாக, நிறைவேற்று அதிகாரங்களை கொண்டிருப்பவர் கூறியதை வரவேற்க வேண்டும்.

சட்டவாக்கம், நீதித்துறைக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றுமாயின், நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்படும். கடந்தகால கசப்பான சம்பவங்கள் இவற்றுக்கு சான்றுபகரும். அதில், அரசியல் கலப்படம் இருந்ததாகவே குற்றச்சாட்டப்பட்டன.

"நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது" என்ற பழமொழி இருக்கிறது. பல வழக்குகளில் தவணை நீடிக்கப்படும் போது, வழக்கு வீசப்பட்டுவிடுமென தீர்ப்புக்கு முன்னரே, தீர்மானங்களை எடுத்துகொள்வோரும் உள்ளர். அது, உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்குகளுக்கு பொருந்தாது.

நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது என்பதே ஜனாதிபதியின் கருத்தாக அமைந்திருந்தது. அவற்றுக்கெல்லாம் சுயாதீனம் முக்கியமானதாகும்.

நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமெனில், அச்செயல்முறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.  எனினும்,  கீழ் நீதிமன்றங்களில், 2,31,506 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை, கீழ்நீதிமன்றங்களின் செயற்பாடுகளை விரைவுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்திநிற்கிறது.

தீர்ப்புகளை விமர்ச்சனங்களுக்கு உட்படுத்த முடியாது. ஆனால், ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், “தாம் எதிர்ப்பார்த்த சாதாகமான தீர்ப்புக்கு தமக்கு கிடைக்காமல் போனமை, பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என்றும், அத்தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்துவதற்கு முடியாதென, மைல்கல்லான நாளில் கூறியிருந்தமையும் கவனிக்கத்தான் வேண்டும். (03.12.2020)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .