Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 10 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆதாரமற்ற எச்.ஐ.வி. பயத்தால் குளியாப்பிட்டியில் ஒரு மாணவி பாடசாலையை இழந்தது இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் 2016ஆம் ஆண்டு விவாதப் பொருளாகி இருந்தது என்பதை நாங்கள் அறிவோம். இவ்வாறான நிலையிலேயே, மஹியங்கனை பகுதியில் 15 வயது குழந்தை ஒன்றுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது.
சில குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதாகவோ அல்லது மேலதிக கல்வி வகுப்புகளுக்குச் செல்வதாகவோ கூறி காட்டுக்குச் செல்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு நோய்கள் உருவாகின்றன என உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை, கணக்கில் எடுக்காமல் விட்டுவிடக்கூடாது. ஆகக் கூடுதலான கவனத்தைச் செலுத்தி, ‘எய்ட்ஸ்’, எச்.ஐ.வி மற்றும் அதன் பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
, ‘எய்ட்ஸ்’, எச்.ஐ.வி எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில், முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும், பாடசாலை மட்டத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
ஒருவரின் உடலில் நான்கு வகையான திரவங்கள் மட்டுமே இன்னொருவருக்குப் பரவுகின்றன. முதலாவது இரத்தம். இரத்தத்தில் அதிக செறிவு உள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைகள் யோனி சுரப்புகள் மற்றும் விந்து. கடைசி வகை தாய்ப்பால். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகின்றது.
இரத்தத்தைத் தொடுவதன் மூலம் ஒருவருக்கு எச்.ஐ.வி. வருமா? முற்றிலும் இல்லை. இந்த எச்.ஐ.வி வைரஸ் சளி சவ்வுகள் வழியாக மட்டுமே உடலில் நுழைய முடியும்.
காயம் உள்ள ஒருவரின் இரத்தம் ஏதோ ஒரு காரணத்திற்காக மற்றொருவரின் கையில் படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் என் கையில் வெட்டு இல்லை என்றால், எச்.ஐ.வி வைரஸ் எனக்குள் நுழைய முடியாது.
உண்மையில் பாலியல் உடலுறவின் போது மட்டுமே விந்து மற்றும் யோனி திரவங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடலுறவின் போது மட்டுமே. யோனி, ஆசனவாய் அல்லது வாயில் ஆண்குறியைச் செருகுவது போன்ற பாலியல் செயல்கள் மூலம் எச்.ஐ.வி. பரவும் அபாயம் உள்ளது.
உண்மையில், தாய்ப்பால் மூலம் மட்டும் எச்.ஐ.வி. பரவும் நிகழ்தகவு 5%க்கும் குறைவாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இது 1%க்கும் குறைவாக உள்ளது. ஆனால், அது அந்த மக்கள் வாழும் சூழல்களில் உள்ள சுகாதார நிலைமைகள் மற்றும் அந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அளவைப் பொறுத்தது.
ஆனால், ஒரு சிறிய ஆபத்து உள்ளது. என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல், குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள் மத்தியில், ‘எய்ட்ஸ்’, எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகரிக்கும்.
சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/ எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு புள்ளி விபரத்தில் பிரகாரம், 4245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 3,000 ஆண்களும், 1,245 பெண்களும் அடங்குகின்றனர். 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையில் ஆண்கள் 10 பேரும் பெண்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த காலப்பகுதியில் 12 பேர் மரணமடைந்துள்ளனர்
நாட்டில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது. என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல், குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள் மத்தியில், ‘எய்ட்ஸ்’,
எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகரிக்கும்.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago