Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 08 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று, மே 7ஆம் திகதியுடன் ஏழு மாதங்கள் நிறைவடைந்தன. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, ஆறு மாதங்கள், நிறைவடைந்துள்ளன.
இந்த குறுகிய காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செல்வாக்கை இழந்துள்ளது என்பது, 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகளிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது.
341 உள்ளூராட்சி மன்றங்களில், 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, செவ்வாய்க்கிழமை (06), சுமுகமான முறையில் நிறைவுபெற்று, பெறுபேறுகளும் வெளிவந்தன. அந்த பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி, பல இடங்களில் வெற்றியீட்டிடுள்ளது.
எனினும், சில மன்றங்களில் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.சில உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்கவே முடியாது.
கொழும்பு மாநகர சபையைப் பொறுத்தவரையில், தேசிய மக்கள் சக்தியை விடவும், ஆகக் கூடுதலான ஆசனங்களை எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளன. பல மன்றங்களிலும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச்சேரப் போவதில்லை என அறிவித்துள்ளார். அப்படியாயின், எதிர்க்கட்சிகள் இணைந்தே பல உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சியமைக்கவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த குறுக்கிய காலத்தில், அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையே உள்ளூராட்சிமன்ற பெறுபேறுகள் எடுத்தியம்புகின்றன. வாய்ப்பேச்சில் வீரம் காட்டிய அரசாங்கம், செயற்பாடுகளில்
திறமையை வெளிப்படுத்தவில்லை. என்பதே அர்த்தமாகும்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், தேசிய மக்கள் சக்தி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கில், தமிழ் கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்துள்ளனர்.
கிழக்கில், தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனநாயகம் கட்டிக்காக்க வேண்டுமாயின், தேர்தல்கள் நடத்தப்படவேண்டும்.
கடந்த அரசாங்கங்கள், பல தேர்தல்களை ஒத்திவைத்தே, ஆட்சியை நீடித்துச்சென்றன. எனினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தலை நடத்தித் தங்களுடைய இருப்பை சுரண்டி பார்த்துள்ளது.
ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களின் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவே இல்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாகவே முன்வைக்கப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள், ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
மக்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே தெரியும். ஆகையால், வேட்பாளர்களை நிறுத்தும்போதும் அதிகூடிய கவனத்தை செலுத்தியிருக்கவேண்டும்.
08.05.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago