2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குழந்தை பண்ணைகளில் கைமாறிய ‘குழந்தை தத்தெடுப்பு’

Editorial   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தை பண்ணைகளில் கைமாறிய ‘குழந்தை தத்தெடுப்பு’

பிள்ளைப்பேறு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் என்பர். திருமணம் முடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர், பிள்ளைப்பெற்றால் ‘தவமிருந்து பெற்றக்குழந்தை’ என சிலர் சொல்வர். ஆனால், தனக்குப் பிறந்த சிசுக்களையே கழுத்தை முறித்து, பற்றைக்காடுகளுக்குள் வீசிவிட்டு செல்வதும், குற்றுயிராய் மண்ணுக்குள் புதைக்கும் சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை.

இந்நிலையில், ‘குழந்தை பண்ணை’ இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டு, இடைத்தரகரும் கைதுசெய்யப்பட்டுள்ளர். இன்னும் பல கர்ப்பிணித் தாய்மார்களும் அந்தப் பண்ணையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டனர். மிகவும் சூட்சுமமான முறையிலேயே பண்ணை இயங்கி இருக்கிறது.

‘முறைப்படியோ’ அல்லது ’முறைத்தவறியோ’ கர்ப்பம் தரித்தால், கர்ப்பத்தை கலைத்தல் சட்டப்படி குற்றமாகும். ஆனால், பிறக்கும் குழந்தைகளை, பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் வழங்கும் வகையில், ‘குழந்தை தத்தெடுப்பு’ சட்டம் இருக்கிறது. இங்குதான் ஒருபுறம் சட்டமும் மறுபுறத்தில் கலாசாரமும் நிற்கிறது.  

மொட்டுவை குழந்தை பண்ணையில் இருந்து, சட்டத்தரணிகள், ​பொலிஸ் அதிகாரிகள், நிறைவேற்று அதிகார தரத்தில் இருப்போர், செல்வந்தர்கள் சிசுக்களைப் பெற்று சென்றிருக்கின்றனர் எனத் தெரிகிறது. அவர்களுக்கெல்லாம் ‘தத்தெடுப்பு கட்டளைச் சட்டம்’ தொடர்பில் ஓரளவுக்கேனும் அறிவிருக்கும்.

அதிலும், பெண் குழந்தைகளை தனித்திருக்கும் ஆண்ணொருவரால் தத்தெடுக்கமுடியாது. விசேட சொந்த உறவுகள் இருக்குமாயின் அதற்கு நீதிமன்றத்தின் ஊடாக அனுமதியைக் கோரிநிற்கலாம். ஆனால், இந்த சட்டத்திட்டங்களுக்குள் எல்லாம் வி​ரலைவிட்டு ஆட்டும் வகையில், சுமார் 34 சிசுக்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. 

ஆனால், வெளிநாடுகளில் ‘குழந்தை பண்ணைகள்’ இருப்​பதை கேள்விப்பட்டிருக்கின்றோம் அங்குள்ள கலாசாரத்துக்கும் நமது பல்லின மக்கள் வாழும் கலாசாரங்களுக்கும் இடையில், குழந்தை பண்ணைக்கு சட்டரீதியிலான அங்கிகாரம் இங்கு வழங்கமுடியாது.

1980 களில் இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் உண்மையான பெற்றோரை தேடிக்கொள்வதற்காக, ‘டீ.என்.ஏ வங்கி’ நெதர்லாந்தில் உருவாக்குவதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 1980-90களில் இலங்கைக் குழந்தைகள் 11 ஆயிரம் பேர், ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனைச் செய்யப்பட்டனர், அதில், 4 ஆயிரம் குழந்தைகள் நெதர்லாந்தில் இருக்கின்றனர்.

குழந்தை பண்ணைகளில் பல்கலைக்கழ மாணவிகளும் சிக்கியுள்ள தகவல் கசப்பானது. தவறிழைத்துவிட்டு, எதிர்காலமின்றி இருட்டுக்குள் இருப்பதைப் போல இருக்காமல், முன்கூட்டிய சிந்தித்திருக்கவேண்டும். அதனூடாக அநாவசியமான கர்ப்பங்களை தவிர்க்கலாம். சட்டவிரோதமான கரு கலைப்புகளையும் தவிரக்கலாம்.

‘குழந்தை தத்தெடுப்பு’க்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்பதலால் இடைத்தரகர்களை நம்பி பணங்களை அள்ளிவீசவேண்டியது இல்லை. ஒன்றைய அடையவேண்டுமாயின் இன்னொன்றை இழந்தே ஆகவேண்டும். கௌரவம், காலசாரத்தை தூக்கிப்பிடித்து பின்கதவுகளால் செல்வதன் ஊடாக, சட்டத்தின் பிடிக்குள் சிக்கிக்கொள்ளவே வேண்டும் என்பதே உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .