R.Tharaniya / 2025 மார்ச் 30 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது இடங்கள், பொது போக்குவரத்துகள் ஏன்? வீடுகளில் கூட, ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொள்வதற்குக் கூட இயலாத நிலைமையொன்று தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அலைபேசிகள் இல்லாத கைகளே இல்லையெனக் கூறலாம்.
தகவல்களை, செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு, தொலைக்காட்சிகள், வானொலிகள்,மறுநாள் பத்திரிக்கைகள் என்ற நிலைமை மாறி, ஓரிரு நொடிகளிலேயே செய்திகள், மக்களிடத்தில் சென்றுவிடுகின்றன. பல போலியான தகவல்களும் பரப்பப்படுகின்றன. அவ்வாறான ஒரு தகவல் சமூகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
மனித வாழ்க்கைக்குத் தகவல் மிகவும் முக்கியமானது. பல்வேறு முறைகள் மூலம் தகவல்களைப் பெறுகிறோம். அவற்றில், ஊடகங்களும் சமூக ஊடகங்களும் முக்கியமானவை. ஊடகங்களில் வரும் தகவல்களின் நம்பகத்தன்மை ஓரளவுக்கு நிறுவப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களின் நம்பகத்தன்மை
குறித்து சிக்கல்கள் உள்ளன.
சில நேரங்களில் போலியான தகவல்கள் மிகவேகமாக மக்களிடத்தில் சென்றடைந்துவிடுகின்றன. இன்னும்
சிலர், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை, தகவல்களை, தங்களுடைய தகவலென, தமது சமூக ஊடகங்களில், எந்தவிதமான உறுதிப்படுத்தலும் இன்றி பகிர்ந்து விடுகின்றன.
சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன. அதனை கல்வியமைச்சு மறுத்திருந்தது.
பிரபலமான நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்க பல்வேறு மோசடிகள் இடம்பெறுகின்றன
மத்திய வங்கியின் இலச்சினையைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட
பிரமிட் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனை மத்திய வங்கி மறுத்திருந்தது.
தவறான தகவல்களைப் பரப்புவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து சமூக ஊடக மேலாளர்களுக்கு எந்த புரிதலும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆகையால், சமூக ஊடகங்களில் தகவல் பரவல் ஏதேனும் ஒரு வகையான ஒழுங்குமுறை பொறிமுறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
‘சமூக ஊடகம்’ என்பது ஒரு ஊடாடும் தொழில்நுட்பமாகும், நாம் தற்போது எதிர்கொள்வது அதன் நடைமுறை பயன்பாட்டின் சிக்கலைத்தான். சமூக ஊடக பயனர்கள் அதைப் பொறுப்புடன் பயன்படுத்துகிறார்களா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வியாகும்.
சமூக ஊடக கட்டுப்பாடு என்பது மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பிரச்சினை. இது தொடர்பான சட்ட தலையீடுகளும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தன. சமூக ஊடக ஒழுங்குமுறை மற்றும் தணிக்கை இரண்டு வெவ்வேறு விஷயங்கள். இந்தப் பிரச்சினையில் எதிர்க்கும் கருத்துக்களை வெளிப்படுத்திய பலர், ஒழுங்குமுறை செயல்முறை என்பது தணிக்கை என்று நினைத்ததைக் காண முடிந்தது.
இந்த நேரத்தில், என்ன சூழ்நிலைகள் வந்தாலும், சமூக ஊடகங்களை மறுக்க முடியாது. இதற்கு ஒரு முறையான ஒழுங்குமுறை அமைப்பு அவசியம். இல்லையெனில், மக்களுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும், சிவில் சமூகத்திற்கும் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் இருக்கும்.
“தகவல்களைப் பரப்புவதால் ஏற்படும் தீங்கு, அதைப் பரப்பாததால் ஏற்படும் தீங்கை விட அதிகமாக இருந்தால், அத்தகைய தகவல்களைப் பரப்பக்கூடாது” என்பது மக்கள் தொடர்பு செயல்பாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு கொள்கையாகும்.
2025.03.27
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025