2025 மே 09, வெள்ளிக்கிழமை

நான்கு வருடங்களை தீர்மானிக்கும் ஒரேயொரு புள்ளடி (X)

R.Tharaniya   / 2025 மே 06 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து, மே.6 ஆம் திகதியான இன்று (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு நடைபெறவிருக்கின்றது. அதற்கான சகல ஏற்பாடுகளையும், தேர்தல்கள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.

 இந்தத் தேர்தலில், 17,256,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 
341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே இன்று நடைபெறுகின்றது. அதில், 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்குகின்றன.

 நான்கு வருடங்கள் ஆட்சியை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறுதியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய தேர்தல் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி ஒத்திவைக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டும் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டன.

இந்த தேர்தலில் உங்களுக்கு ​நன்கு தெரிந்தவர்களே போட்டியிடுகின்றன. தேர்தல் பரப்புரைகளைப் பார்த்தோமெனில், தேசிய பிரச்சினையை மையமாக வைத்தே முன்னெடுக்கப்பட்டன. எனினும், இது உங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட தேர்தலாகும். ஆகையால், யார்? வெற்றி பெற்றால், ஊருக்கும் கிராமத்துக்கும் உங்களுடைய பிரதேசத்துக்கும் நன்மை பயக்கும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

உள்ளூ​ராட்சி மன்றத் தேர்தல் என்றாலே, வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல பயங்கர குற்றச்சாட்டுகளுடன்  தொடர்புடையவர்களே போட்டியிட்டனர். அந்த காலம் மலையேறி விட்டது என்று கூறமுடியாது.

ஏனெனில், இந்தத் தேர்தலில் ​போட்டியிடும் பலரும் மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள், பிரசார நடவடிக்கையின் போது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை வன்புணர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றுமொரு சிறுமியை வன்புணர்ந்து குற்றச்சாட்டில் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, தற்போது பேசும் பொருளாக இருக்கும், கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்விப்பயின்ற மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்

என பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கணித ஆசிரியரும், இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில், பல்வேறான குற்றச்சாட்டுகளின் கீழ், மார்ச் 3ஆம் திகதி முதல், மே. 4 ஆம் திகதிக்கு இடையில் 54 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் ஆதரவாளர்கள் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆகையால், இன்னும் நான்கு வருடங்களில் உங்களுடைய பிரதேசங்களில் அபிவிருத்தி வேண்டுமா? அல்லது ஊழல்,மோசடி மற்றும் மேலே குறிப்பிட்ட குற்றங்கள் இடம்பெறவேண்டும் என்பது நீங்கள் இடும் ஒரேயொரு புள்ளடியே (X) தீர்மானிக்கும் என்பதை நினைவில் கொள்க,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X