Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல், வன்முறை, போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30ஆம் திதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா. கடந்த 2011.08.30ஆம் திகதியன்று அறிவித்தது.
இந்தநாளில் போராட்டம் நடத்தியும், பேரணியாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்நாளைக் கடைப்பிடித்துவருகின்றனர்.
இலங்கையில் 1980ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அரசே காரணம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறிவருகின்றனர். வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே சரியாக, உணர்வுபூர்வாக சொல்லமுடியும்.
நமது நாட்டில், தமிழர்கள் மட்டுமே அந்த வலியை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். எனினும், நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வார். தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும்.
சரி... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள்.
தங்களுடைய உறவினர்களைத் தேடித்தேடியே பலரும் இறந்து விட்டனர். இன்னும் சிலர் வயதானவர்களாகி விட்டனர். நோய்வாய்ப்பட்டவர்கள், போராட்ட களத்துக்குச் செல்லமுடியாது. வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர்.
எனினும், தங்களுடை உறவினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை
மட்டும் கைவிடவே இல்லை. அப்படிக் காணாமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள்.
அப்படி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதியைக் கோருகின்றனர்.
தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தீவிரமாக எதிர்த்த ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி இராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா என்பது பற்றிய தகவல்கள்
ஏதும் தெரியாமலேயே இருக்கின்றன.
அவர்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். காணாமலாக்கப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும்.
ஆட்சிப்பீடமேறிய கடந்த அரசாங்கங்கள் சாக்குப்போக்கு சொல்ல, காலத்தைக் கடத்தி வந்துவிட்டது. ஆகையால், தங்களுடைய உறவினர்களுக்கு என்ன? நடந்தது என்பதை இந்த அரசாங்கம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும். இவற்றை மட்டுமே இந்த அரசாங்கத்திடமிருந்தாவது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
37 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago