Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“குற்றம் மற்றும் வன்முறை குறித்த அச்சமின்றி நம்பிக்கையுடன் வாழக் கூடிய சமாதானம் மிக்க சூழல் ஒன்றை உருவாக்கல்” என்பது இலங்கை பொலிஸின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஒரு சில பொலிஸ் நிலையங்களுக்குச் சென்றால், தங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் இருக்கின்றனர்.ஒரு சில அதிகாரிகளில் செயற்பாடுகளால், முழு பொலிஸுக்கும் கரும்புள்ளி வைக்கப்பட்டு விடுகின்றது.
எனினும், மிக நேர்மையாக செயற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில், பல பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இலஞ்சம் வாங்குவோரும் இல்லாமல் இல்லை.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, பசறை மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதான நடனக் கலைஞர் நிமேஷ் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவைக் கொண்ட சிறப்புக் குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நகைகளைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து இதற்கு முன்னர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சம்பவங்களை வைத்து, பொலிஸ் நிலையங்களுக்கு அருகில், சவப்பெட்டி கடைகள் இருக்கும் வகையில் கேலிச் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆக, பொலிஸ் நிலையங்களுக்குப் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன.
1977 வரை, குற்றப் புலனாய்வுத் துறை மக்கள் ‘மாடிகளில்’ இருந்து குதிக்கும் அல்லது விழுந்து இறக்கும் இடமாகவே இருந்தது. அதன் பிறகு, யாரும் ஜன்னலுக்கு வெளியே தள்ளப்பட்டுக் கொல்லப்படவில்லை. மாறாக, சந்தேக நபர்கள் கொல்லப்படாமல் வெறுமனே கொல்லப்படுகிறார்கள்.
சில பொலிஸ் நிலையங்கள், ஒரு வகையான மரணப் பொறியாக உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, தந்திரமான எதிரிகளிடமிருந்தும் கொலைகாரர்களிடம் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் பொலிஸை நோக்கி ஓடினோம். இன்று, குடிமக்களுக்கு பொலிஸாரிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பதில்லை. இது மிகவும் அவமானகரமான சூழ்நிலை.
ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் பொலிஸ் தாக்குதல்களால் இறந்தாலும், அவர்களுக்கான பொறுப்புக்கூறல் இல்லை. இவ்வாறான மக்களுக்காக நீதி கேட்க மிகச் சிலரே முன்வருகிறார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவரை பொலிஸ் துரத்தத் தொடங்குகிறது.
ஆகையால், பொலிஸாரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. சில பொலிஸ் நிலையங்களும் சித்திரவதைக் கூடம் போல, துர்நாற்றம் வீசும் இடமாக மாறி வருகிறது என்பதே உண்மையாகும்.
இதேவேளை, கடமையில் இருக்கும் போதே, பொலிஸார், பல்வேறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரில் பலரும் இலஞ்சம் பெறுகின்றனர். குற்றவாளிகளுடன் இணைந்து மது விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்தமையும் அண்மையில் செய்திகளாக வெளிவந்துள்ளன. இவ்வாறான சம்பவங்கள், சட்டம், ஒழுங்கை பேணும் பொலிஸாருக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்க.
2025.04.11
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago