Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 29 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தை கர்ப்பம் என்பது பொதுவாகப் பருவ வயதை எட்டாத பெண்களின் கர்ப்பமாகும். இது மனித சமூகத்தில் மிகவும் கடுமையான பிரச்சனையாகும்.
பாலியல் வன்கொடுமை. இளம் காதல் உறவுகள் ஹோட்டல் அறைகள் வரை நீண்டுள்ளது. இளம் வயது திருமணம் வயது குறைந்த கர்ப்பத்துக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
நமது நாட்டில் 2023ஆம் ஆண்டில், 167 சிறுமிகளும், 2024இல், 213 சிறுமிகளும் கர்ப்பமானார்கள். சிறுமிகள் கர்ப்பம் பெரும்பாலும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாகவே நிகழ்கிறது. அது நாட்டின் சமூக வீழ்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும்.
இலங்கையில் உள்ள பிற பிரதேச செயலகப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, அதிக போதைப்பொருள், துஷ்பிரயோகம் சதவீதம், அதிக போதைப்பொருள் கடத்தல் சதவீதம் மற்றும் வயது குறைந்த கர்ப்பம் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரித்துள்ள பிரதேச செயலகப் பிரிவாக, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு பெண் குழந்தைப் பருவத்தைக் கடந்த பின்னரே தாயாக வேண்டும். குழந்தைப் பருவத்தைக் கடக்காமல் தாயாக மாறும் பெண்களால், சமூகம் ஒரு சிதைந்த அலகாக மாறுகிறது.
மனித சமூகத்திற்கும் விலங்கு சமூகத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த நாட்டில் இளமைப் பருவத்தைக் கடக்காத ஏராளமான விபச்சாரிகள் உள்ளனர்.
டீனேஜர்களாக இருக்கும் பல தெருப் பெண்கள் உள்ளனர். இந்தப் பெண்களுக்குப் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் அல்லது சமூக நோய்கள் பற்றிய அறிவு இல்லை. ஒரு பெண் தாயான பிறகு, அவளுடைய குழந்தைப் பருவம் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.
சரியான கல்வி இல்லாத, வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை குழந்தைப் பருவத்தில் பெரிதும் பாதிக்கும் இரண்டு காரணிகளாகும். உலகில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக
21 மில்லியன் குழந்தைப் பருவ கர்ப்பங்கள் பதிவாகின்றன. இந்த கர்ப்பங்களில் இருந்து சுமார் 12 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன.
பொதுவாக, 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பமாகும்போது, அவர்கள் பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். குழந்தைப் பருவத்தில் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் எடை குறைவாக இருப்பார்கள்.
இந்த நாட்டில் குழந்தை கர்ப்பம் பற்றி சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்க சரியான திட்டம் இல்லை. இந்த விழிப்புணர்வு பணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுக்கலாம். குறைந்த கல்வி, சரியான பெற்றோர் பராமரிப்பு இல்லாமை, கவனிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, பாடசாலை வயதுக் குழந்தைகளுக்கு இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து மேலும் கல்வி கற்பிப்பதன் மூலமும், சமூக மட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் போன்ற திட்டங்களை நடத்துவதன் மூலமும் இந்த சூழ்நிலையைக் குறைக்க முடியும் என்பதே எமது அவதானிப்பாகும்.
29.05.2025
38 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago