Freelancer / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்,
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீட ஸ்தாபகரும் காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 16 ஆம் வருட மஹா சமாதி தின விசேட பூஜை நிகழ்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் நடைபெறும்.
அன்றைய தினம் காலை 6-30 மணி முதல் ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயத்தில் விசேட அலங்கார பூஜைகள் நடைபெற்று குரு பீடத்தில் விசேட ஸ்தபானபிஷேகம் குரு பூஜைகள், சுவாமிகளின் நல்லாசி பிரார்த்தனை என்பன நடைபெறவிருப்பதோடு பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெய்யடியார்கள் அனைவரும் இப்பூஜையில் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சற்குரு தேவரின் பரிபூரண அருளாசிகளையும் எல்லாம் வல்ல ஸ்ரீ இலங்காதீஸ்வரர் பெருமான், ஆதி சக்தி அன்னை ஸ்ரீ காயத்ரி தேவியின் அருட்காடாச்சத்தையும் பெற்று செல்லுமாறு ஸ்ரீ காயத்ரி பீடத்தின் அரங்காவலர் சக்திவேல் சந்திரமோகன் கேட்டுக்கொள்கின்றார்.

2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago