R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய நான்காம் நாள் தேரோட்ட திருவிழா பக்த அடியார்கள் சூழ வெகு விமர்சையாக இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் சனிக்கிழமை ( 23 ) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தில் இடம் பெறும் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வேத பாராயணங்கள் ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன், அரசடிப்பிள்ளையாருக்கு பக்தி பூர்வமாக கொடியேற்றம் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் இடம்பெறும் இப் பெருவிழாவில் 26 ம் திகதி நான்காம் நாளாகிய செவ்வாய்க்கிழமை (26) அன்று தேரோட்டத் திருவிழா பக்தர்கள் புடை சூழ வெகுபிமர்சையாக இடம் பெற்றது மறுநாள் 27ம் திகதி ஆவணி சதுரச்சியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆலய உற்சவங்கள் யாவும் ஆலயம் பிரதம குரு ஹரிகர சர்மா, கணேச லோகநாத குருக்கள் தலையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை (27) அன்று தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


35 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago