Freelancer / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டவரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய ஆவணி பௌர்ணமி சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று புதன்கிழமை (30)இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு முருகன் ஆலய ஆவணி பௌர்ணமி தீர்த்தோற்சவம் கடந்த 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து 10நாட்கள் இடம் பெற்ற மலைத்திருவிழா, மயில்திருவிழா, தேர்த்திருவிழாவுடனும் இன்று சுபவேளையில் இடம்பெற்ற தீர்த்தோற்சவம், மாலை நடைபெற்ற கொடியிறக்கம், திருக்கல்யாணம், நாளை(31) இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல். நாளை மறுதினம்(01) இடம்பெறும் வைரவர் பூஜையுடனும் நிறைவுறுவதோடு, தீர்த்தோற்சவ தினமான இன்று காலை பொற்சுண்ணம் இடிக்கப்பட்டதன் பின்னர் கொடிமரப்பூஜை நடைபெற்றது.
வி.சுகிர்தகுமார்



7 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago