2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

இரத்தினேஸ்வர‌ சிவாலயத் தேரோட்டம்

Mayu   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இரத்தினேஸ்வர‌ சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவத் தேர்த்திருவிழா நேற்று (31) மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, நேற்று (31) பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் இராஜாங்க அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் இந்திரஜித் கட்டேகம்பளை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 

உமாமகேஸ்வரி 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .