R.Tharaniya / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தையொட்டி எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (9) அன்று காலை ஆரம்பமாகியது.
புதன்கிழமை (10) அன்று எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். நாளை மறுநாள் வியாழக்கிழமை (11) அன்று மகா கும்பாபிஷேகம் குடமுழுக்கு நடைபெறும்.
அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்துள்ளனர். ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில் முன்னிலையில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியது.
கும்பாபிஷேக கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆலோசனையில் கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.




வி.ரி.சகாதேவராஜா
38 minute ago
42 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
47 minute ago
56 minute ago