R.Tharaniya / 2025 ஜூன் 03 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த பொங்கல் உற்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல் இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமான நிகழ்வுக்காக அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் இறுதி மூன்றாவது திங்கள் வைகாசிப் பொங்கல் விழாவும் இடம்பெறும்.
இந்த சடங்கு முறையில் இரண்டாவது திங்கள் கிழமை (02) அன்று தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
காட்டு விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் இடம்பெறும்.
தொடர்ந்து எதிர்வரும் 08.06.2025 அன்று காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் இடம்பெற்று 09.06.2025 திங்கள் வைகாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சண்முகம் தவசீலன்






31 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago