2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரை

Mayu   / 2024 மே 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 சாமியார்கள் புதன்கிழமை (01)  மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் வைத்து மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் யாத்திரை ஆரம்பிக்கவுள்ளனர்.



 மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி  மண்டல பூஜையும் மதிய அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி  மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி குறித்த சாமியார்கள் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.

20 ஆம் திகதி காலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து தமது விரதத்தை பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X