2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கதிர்காம ஆலயத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்

R.Tharaniya   / 2025 ஜூன் 15 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்க ருஹுணு கதிர்காம ஆலயத்தில் நடைபெறும் (2025)ஆம் ஆண்டிற்கான  எசல பெரஹராவில் பங்கேற்க பாத யாத்திரையாக செல்லும் முதல் குழு சனிக்கிழமை (14) அன்று மதியம் மஸ்கெலியா சாமிமலை பகுதியில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

இந்தக் குழு சனிக்கிழமை (14) அன்று நோர்வூட் இந்து ஆலயத்திற்கு வந்து ஓய்வெடுத்த, பின்னர் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று தலவாக்கலை நகரத்திற்கு தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கினர்.

இந்தக் குழுவில் 22 பேர் பங்கேற்றனர் .அவர்கள் மஸ்கெலியா, சாமிமலை, ஹட்டன், நுவரெலியா, வெலிமடை  , பண்டாரவளை, வெல்லவாய, தனமல்வில, கும்பல் காம, புத்தள மற்றும் யால ரிசர்வ் வழியாக 275 கிலோமீட்டர்தூரம் நடந்து செல்வதாக தெரிவித்தனர்.செல்வும்பாதையில் உள்ள மத இடங்கள் மற்றும் ஓய்வு இல்லங்களில் இரவு நேரத்தில் ஓய்வுபெற்று, மறுநாள் தங்கள் பயணத்தை தொடங்குவார்கள் என்றும் தெரிவித்தனர். பாதையின் இருபுறமும் உள்ளவர்களால் பக்தர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .