Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 13 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
கதிர்காம கந்தன் ஆலயத்தில் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. முகூர்த்தத்தில் குவளை நடும் நிகழ்வு இடம்பெற்றது.நேற்று முன்தினம் மாலை, பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள், மாணிக்க ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, இரவு வள்ளி அம்பாள் திருக்கோவில் வைக்கப்பட்டது.
நேற்று காலை சுப முகூர்த்தத்தில் ஆலயத்தில் இருந்து அம்மக்களின் துணையுடன் .ராலா மற்றும் கடைக்காரர் ராலா தலைமையில் கடமையாற்றிய குழுவினர் மகா தேவாலயத்திற்கு சென்றனர். கதிர்காமம் பெரிய ஆலயத்தின் கப்புறாளை நேற்று காலை சுப வேளையில் கன்னிக்கால் மற்றும் பெரஹரா பொறுப்பு நிர்வாகி, ராலா தலைமையில் கடமையாற்றிய குழுவினர் ஆலயத்திற்குச் சென்று பந்தக்கால் நட்டனர்.
அதன்படி, நேற்று முதல் 45 நாட்களுக்குப் பின்னர் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பெரஹரா ஆடிவேல் திருவிழா ஜூன் 26ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 09ஆம் திகதி மஹா பெரஹரா இடம்பெற்று, ஜூலை 10ஆம் திகதி காலை மாணிக்க கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன் நிறைவடையும்.
உண்மையில் மேற்கூறப்பட்ட சடங்குகள் தினங்கள் பௌத்த பாரம்பரிய முறைப்படி தீர்மானிக்கப்பட்டது. சைவ முறை அல்லது இந்துக் கோயில் என்ற ரீதியில் நோக்கினால் கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஆடி மாதத்தில் வரவேண்டும்.
ஆனால் இங்கு இவ் வருட உற்சவம் ஆனி மாதத்தில் வருகிறது. எனவே ஆடிவேல் விழா என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா என்பது வினாவாகும். அப்படி எனின் ஆனிவேல் விழா என்று அழைக்கலாமா? என்பதும் சைவர்களின் அடுத்த வினாவாகும்.
வி.ரி.சகாதேவராஜா
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago