2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கதிர்காம பாதயாத்திரை நாளை ஆரம்பம்.....

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்- கதிர்காமம் பாதயாத்திரை மே 30 புதன்கிழமை அதிகாலை  செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிறது. 

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு ,திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களை தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.

அதன் முன்னோடியாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பெரிய வளவு கந்தசாமி ஆலயத்திலிருந்து செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை நோக்கிய ஆரம்ப முன்னோடி பாதயாத்திரை ஆரம்பமானது. 

ஜெயா வேல்சாமி தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (27) அன்று நேராக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை சென்றடைந்து செவ்வாய்க்கிழமை (29) செல்வச்சந்நிதி ஆலயத்தை வந்தடைந்தனர். 

செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து முறைப்படி கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை வியாழக்கிழமை (01) அன்று ஜெயாவேல் சாமி தலைமையில் ஆரம்பமாகிறது. ஆரம்பத்தில் சுமார் 40 அடியார்கள் பங்கு பெறுகின்றனர்.

இடைநடுவில் கலந்து கொள்ளும் அடியார்கள் கீழ் குறிப்பிட்ட ( 0778386381.0763084791 ) தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து  தங்கள் விவரங்களை  பதிவு செய்யுமாறு தயவுடன்தலைவர் ஜெயா வேல்சாமி கேட்டுக் கொள்கிறார் .

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .