Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி டச்பே கிராம உத்தியோகத்தர் பிரிவில் உச்சமுனை எனும் தீவில் வெள்ளைக்கார குடா எனும் இடத்தில் ஒரு பக்கம் பெருங்கடலாலும், மறுபக்கம் சிறு கடலாலும் சூழப்பட்டுள்ள ஒரு தொன்மை வாய்ந்த அழகான தீவாக கீரி முந்தல் காணப்படுகின்றது.
கி.மு 700 ஆம் நூற்றாண்டிலே மன்னார் மாதோட்டம், குதிரைமலை, துறைமுக வர்த்தக பெருந்தோட்ட வரலாற்றோடு மக்களின் வாழ்வியல் ஆரம்பமாகிறது. மேலும் 1811 ஆம் ஆண்டு இவ் ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக ஆலயத்தில் உள்ள மணியில் பொறிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டியில் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீரி முதல் திருச் சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மைக்கல் கனீஸியஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் பங்குதந்தை எண்டன் நிரோஷன் அடிகள், உச்சமுனை பங்குதந்தை ஜொய்ஸ்டஸ் அடிகள், உதவி பங்குத்தந்தை கிருஷாந்த் அடிகள், கீரி முந்தல் மண்ணின் அருட் சகோதரி சிந்தாத்திரி நலனி ஆகியோருடன் இன்னும் பல பங்குதந்தைகள்,அருட்சகோதரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம்.யூ.எம்.சனூன்
24 minute ago
45 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
53 minute ago
54 minute ago