R.Tharaniya / 2025 ஜூலை 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
குப்பிழான் வீரமனைகன்னிமார் கெளரிஅம்பாள் ஆலயமகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.
குப்பிழானைச் சேர்ந்த புலம்பெயர் அடியவர்கள் மற்றும் கிராமத்து அடியவர்களின் நிதிப்பங்களிப்பில் இவ் ஆலயம் தற்போது புதுப்பொலிவுபெற்றுத் திகழ்கின்றது.
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிவஸ்ரீ. கிருஷ்ண பிரணவக் குருக்களைப் பிரதிஷ்டா பிரதம குருவாகக் கொண்டு ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்களின் நெறிப்படுத்துதலில் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இவ் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த வியாழக்கிழமை (10) அன்று அதிகாலை 05.30 மணியளவில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஆரம்பமானது.சனிக்கிழமை (12) அன்று காலை 09.20 மணியளவில் அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் ஆரம்பமாகி மாலை 04 மணிவரை இடம் பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.





55 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
3 hours ago