2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம்

Mayu   / 2024 ஜூன் 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை  உற்சவம் எதிர்வரும் யூலை மாதம் 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருக்கின்றது.

அது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளை தீர்மானிப்பதற்கான அதிகாரசபைக்கூட்டம்  ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் ஆலய முன்றலில் சனிக்கிழமை (29) நடைபெறவள்ளது.

திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் முன்னிலையில் நடைபெறும் அனுசரணைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

இந்தவருடத்திற்கான ஆடிஅமாவாசை உற்சவம் ஜூலை மாதம் 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.மறுநாள் பூங்காவனத்திருவிழா தொடர்ந்து மறுநாள் வயிரவர்  பூஜையுடன் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X