2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சிவனாலய மகா கும்பாபிஷேகம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள்  ஆலயத்தில் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை  (11) அன்று சிறப்பாக நடைபெற்றது.

அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிர்மாணித்து கொடுத்துள்ளனர். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களின் வழிகாட்டலில் கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா.கோவர்த்தன சர்மா முன்னிலையில் நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட நிர்வாக சபையினர் அடியார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தின் சார்பாக திருமதி ரஞ்சன் அகந்தினி மற்றும் மகன் திருஷாந் உள்ளிட்டவர்கள் கும்பாபிஷேக மலரையும் வெளியிட்டு வைத்தனர்.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .