Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் நாடு திருஞானசம்பந்தர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீ கார்யம் வாமதேவ தவத்திருசிவாக்கர தேசிக சுவாமிகள ; அம்பாறை, திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் அறநெறிபாடசாலைகள், ஆலயங்களில் ஆன்மீக அருளுரைகள் நிகழ்த்தவுள்ளார்.
ஆளுரைகள் புதன்கிழமை (13) பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலை, வீரமா நகர் நாகதம்பிரான் ஆலயத்திலும், வியாழக்கிழமை (14) காலை 9.00 மணிக்கு நீனாக்கேணி சிவனருள் கல்வி நிலையத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு சேனையூர் மத்திய கல்லூரியிலும், வெள்ளிக்கிழமை (15) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனை, மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண மிஷனிலும், சனிக்கிழமை (16) காலை 9.00 மணிக்கு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், மாலை 4.30 மணிக்கு மண்டூர் இராமகிருஷ்ண மிஷனிலும் சுவாமிகளின் ஆன்மீக அருளுரைகள்நடைபெறவுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (17) காலை 8.00 மணிக்கு அம்பாறை தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிவக்கார தேசிக சுவாமிகளின் திருவாசக மகாநாடு நடைபெற உள்ளது.
திங்கட்கிழமை (18) காலை 8.00 மணிக்கு அம்பாறை, அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியிலும், காலை 9.30 மணிக்கு நாவலர் வித்தியாலயம் கோளாவிலும், காலை 11.00 மணிக்கு தம்பிலுவில் மத்திய கல்லூரியிலும் மாலை 5.00 மணிக்கு காயத்திரி கிராமம் சிவனருள் கட்டிடத்திலும், செவ்வாய்க்கிழமை (19) காலை 8.00 மணிக்கு அம்பாறை, திருக்கோவில் மேதடிசன் வித்தியாலயத்திலும், காலை 9.30 மணிக்கு விநாயகபுரம் மகா வித்தியாலயத்திலும், காலை 11.00 மணிக்கு கோமாரி, மேதடிசன் வித்தியாலயத்திலும், மதியம் 12.00 மணிக்கு சம்மாந்துறை, ஸ்ரீ கோரக்கர் சித்தர் பீடத்திலும் ஆன்மீக அருளுரைகள் இடம்பெறவுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தரும் சுவாமி அவர்களின் காலை, மாலை நடைபெறும் இப் புனித நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறையருள் பெறுவதோடு சுவாமிகளின் அருளாசிகளையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள்விடுகின்றனர்.
52 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago
8 hours ago