2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

திருக்கேதீஸ்வர ஆலய கொடியேற்றம் ...

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் திருக்கேதீஸ்வரஆலயத்தில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (31) அன்று ஆரம்பமானது.

திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம் பெற்றது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள்கொடி தம்பத்திற்கு முன் எழுந்தருளியதை அடுத்து கொடி தம்பத்திற்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.

சுப நேரத்தில் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்திகள் உள் வீதி உலா வந்தனர்.

இதை தொடர்ந்து எதிர் வரும் 08.06.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழாவும் 09.06.2025 ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.  

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .