R.Tharaniya / 2025 ஜூன் 09 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (8) அன்று இடம் பெற்றது.
உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள், தீபாரதனைகள் இடம் பெற்றதை தொடர்ந்து உள் வீதி உலா வந்த மூர்த்திகள் தேரில் எழுந்தருளி மக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வீதி உலா வந்தது.
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பச்சை சார்த்தப்பட்டு ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
தேர் திருவிழா ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இவ் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
திங்கட்கிழமை (09) அன்று தீர்த்த திருவிழாவும், உற்சவமும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.










எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .