R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட திருக்கோவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் அப்பர் பெருமானின் சித்திரைத்சதய குரு பூசை தின பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (25) சிறப்பாக கொண்டாடப்பட்டது .
குருகுலப் பணிப்பாளர் கண. இராசரெத்தினம்( கண்ணன்) தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் திருக்கோவில் பிரதேசத்தில் குருகுலத்தில் நடத்தப்படும் அறநெறி பாடசாலைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்களுக்கான பரிசுகள் குருகுலத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குருகுல குருமார்களும் கலந்து ஆசி வழங்கினார்.
ஆறுமுக கிருபாகர குருக்கள் ,பிருதுவிந்த சர்மா ,ஆகியோர் திருக்கோவில் பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தி தேவராஜன் கலந்து சிறப்பித்தார்.
குரு பூஜையின் போது திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் 47 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் கடமையாற்றிய கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பா. சந்திரேஸ்வரர் குருகுல நிர்வாகத்தினரால் முத்துமாரியம்மன் பாடசாலை மற்றும் முத்து மாரியம்மன் ஆலய அறங்காவலர் களாலும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.
வி.ரி.சகாதேவராஜா







6 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago