Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 14 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்ராபௌர்ணமியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடும் மலையில் அபூர்வமூலிகைகளிலான மெய்சிலிர்க்கும் அற்புதமான குபேர மகா வேள்வி யாகம் உணர்வு பூர்வமாக நடைபெற்றது .
இதற்கென விசேடமாக இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருமாபெரும் குபேரயோகம், குபேரகுருஜிஸ்டார்ஆனந்த்அவரதுகுழுவினருடன் இவ் யாகத்தை செய்தார்.
வேலோடு மலை முருகன் ஆலயம் தலைவர் பெற்றஅதிபர்தியாகராஜா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
சித்தர்களின் குரல்அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீபிரதானபாகமேற்று யாகத்தை வழிநடத்தினார்.
முன்னதாக அருகில் உள்ளமலையில் நாகவழிபாடு நடைபெற்றது. அன்றுஇரவுநடுநிசியில் இலங்கையில் சித்தர்கள் வாழும்வேலோடும் மலையில் பதினெண் சித்தர்கள் சன்னதியில் அபூர்வகாய கல்ப மூலிகைகளை கொண்டு சர்வவல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நடைபெற்றது.
அத்துடன் எல்லோருக்கும் அதி சூட்சுமமான தனயோக ஆகர்ஷண குபேரசங்கல்பத்தை செய்து சக்தி வாய்த்த குபேரதீக்ஷையும் வழங்கினார். சித்தர்களின் குரல்அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைவர்ஆதித்தன் உப தலைவர் மனோகரன் நமசிவாய மகேஸ்வரன் சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வி.ரி.சகாதேவராஜா
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago