மாசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மண்டூர் பாலமுனை ஶ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி கே எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் முறையே திருவிளக்கு பூஜை, காயத்திரி சித்தர் பகவான் ஆர்.கோ. முருகேசு சுவாமிகளின் தெய்வீக திருப்பாதங்களுக்கு குரு பாதாபிஷேகம், இவ்வுலகை ஆளும் சப்தரிஷிகள் 18 சித்தர்களை ஆவாகனம் செய்து 18 பூரண கலசங்கள் வைக்கப்பட்டு இந்தியாவிருந்து தருவிக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த காயகல்ப சஞ்சீவி உயிர் ஜீவ மூலிகைகள் இடப்பட்டு சக்தி வாய்ந்த மகா மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு மாசி மாத பௌர்ணமி உலக சேர்மத்திற்கான காயத்ரி மகா யாகம் மிகவும் பக்தி பூர்வமாக நிகழ்த்தப்பட்டது.
அதன் பின்னர் மகாயோகி யினால் கூடியிருந்த பக்தர்களுக்கு சக்தி வாய்ந்த ஆன்மீக அருள் ஞான உபதேசம் நிகழ்த்தப்பட்டு அன்னதானமும் அருளாசிகளும் வழங்கப்பட்டது.