2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மன்னார் அந்தோனியார் ஆலய திருவிழா

R.Tharaniya   / 2025 ஜூன் 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - சிற்பியாறு பாம்புவழிகாட்டி அந்தோனியார் ஆலயவருடாந்த திருவிழாவானது செவ்வாய்க்கிழமை(03) சிறப்பாக நடைபெற்றது.

மாதத்தில் முதல்வரும்ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்துஅந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை. அந்த வகையில் செவ்வாய் கிழமை திருவிழா முன்னிட்டு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அந்தோனியாரை தரிசித்து சென்றனர்.

மேலும்,பக்தர்கள் தமதுநேர்த்தி கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப்பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமதுவேண்டுதல்கள் எழுதிய கடதாசிகளை மரங்களில் கட்டுவதையும், பிள்ளைப் பேறு வேண்டி தொட்டில்களை கட்டுவதையும் அவதானிக்க முடிந்தது.

குறித்த ஆலயத்திற்கு சென்று வேண்டியவர்களின் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறும் படியால் இந்த ஆலயமானது பிரசித்தி பெற்றுள்ளது. இதனால் கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி பல்வேறு மதத்தவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .