Janu / 2025 ஜூலை 23 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா புதன்கிழமை(23) அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டபம் பூஜை நடைபெற்றதுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மாமாங்கேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள் பாலித்தார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, இராம பிரானால் வழிபட்டதாக கூறப்படும், வரலாற்றை தொன்மையும், புகழும் மிக்க இவ்ஆலயத்தின் ஆடி அமாவாசை தினமான வியாழக்கிழமை(24) தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
வ.சக்தி








15 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
51 minute ago