2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மிக உயர்ந்த பால முருகன் சிலை ஸ்தாபிப்பு

Janu   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை மட்டக்களப்பு தாதாந்தாமலை, 40வட்டையடியில் ஸ்தாபிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (29) குடமுழுக்கு செய்யப்பட்டது.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் 40வட்டை சந்தியில் இந்த பாலமுருகன் நிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எனது முருகன் புலனம் குழுவின் ஏற்பாட்டில் சுமார் 35 உயிரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலமுருகன் சிலை மற்றும் 40வட்டை சந்தி பிள்ளையார் ஆலயத்தின் குடமுழுக்கு என்பன இன்று நடைபெற்றது.

தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வா.கிருஸ்ணா


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X