R.Tharaniya / 2025 ஜூன் 09 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் திருகோணமலை, வெருகல் - வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விசுவாவசு வருடம் வைகாசி திங்கள் 25ம் நாள் ஞாயிற்றுக் கிழமை (08) சிறப்பாக நடைபெற்றது.
16 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற இக் கும்பாபிஷேகம் பிரதிஷ்ட பிரதம குருவான அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது விநாயக வணக்கத்துடன் விசேட திரவிய ஹோம மஹாயாகம் இடம்பெற்றது. அத்தோடு பிள்ளையார் ,முருகனுக்கான கும்பமும் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெளி வீதி உலா வந்தது.
இதன் பின்னர் அந்தண சிவாச்சாரியார்களால் கிரியைகள் நடத்தப்பட்டு ராஜகோபுரத்திற்கு பிரதான கும்ப நீர் சொரியப்பட்டது. அதன் பின்னர் இறுதியாக கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். 16 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேகத்தில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா







32 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago