Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 04 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணைதாமரை வீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம் பதி சிறி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழத் ஏலம் இடம்பெற்றுள்ளது.
இவ் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் எட்டாம் நாளான செவ்வாய்கிழமை (03) அன்று மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன் போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டே சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது. இதன் போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் (4 60 000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.
இதன் போதுஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களையும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கிய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவில் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடைய உள்ளது.
எஸ்.நிதர்ஷன்
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago