2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம்

Janu   / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க யாழ். தாவடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (29) அன்று  பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. மேளதாள வாத்தியங்கள் முழங்க அந்தணர் சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, தேவஸ்தான பிரதம குருவான க.கணபதிராஜா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கொடியை எற்றிவைத்தனர்.

பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் இந்த கொடியேற்றத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர்.

இவ் கொடியேற்ற மஹோற்சவத்திற்கு தென்னிந்திய திரைப்பட நடிகரான ஜெய் ஆகாஷ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .