2025 ஜூலை 31, வியாழக்கிழமை

1 லீற்றர் பெட்ரோல், எலுமிச்சம் பழங்கள் இலவசம்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசலின்  விலை கடுமையாக உயர்வடைந்து வருகிறது.

தற்போதை நிலவரப்படி  1 லீற்றர் பெட்ரோலின் விலை  111.83 ரூபாய்க்கும், டீசல் 100.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் எனவும்  கூறப்படுகின்றது.

அத்துடன் எரிபொருள் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும்  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரணாசியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோருக்கு ஒரு லீற்றர் பெட்ரோல் மற்றும் எலுமிச்சம் பழங்களை இலவசமாக வழங்கி வரும் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொலைபேசி மற்றும் அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு தனது  கடையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் 10,000 ரூபாய்க்கு மேல் கடையில் கொள்வனவு செய்வோருக்கு ஒரு லீற்றர் பெட்ரோலினை  இலவசமாக வழங்கி வருகின்றார்.  

மேலும் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு ஏற்ப எலுமிச்சம் பழங்களையும் அவர் இலவசமாக வழங்கி வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு வாரணாசி பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு அவரது கடையில் விற்பனையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .