2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரிசி லாரி ; ஓட்டுனர் பலி

Freelancer   / 2022 ஜூன் 23 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியாத்தம் அருகே மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பத்திரபல்லி அருகே மலைப்பாதையில் அதிகாலை லாரி கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியிலிருந்து சென்னைக்கு லாரியில் அரிசி லோடு ஏற்றிக்கொண்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (38) என்பவரே  பலியாகினார்.

அப்பொழுது வி.கோட்டா மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்த லாரி பத்திரப்பல்லி சோதனைச்சாவடி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

இதுகுறித்து பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் 50 அடி பள்ளத்தில் இருந்த ஓட்டுநர் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .