2025 ஜூலை 30, புதன்கிழமை

100 பெண்களுக்கு மேல் ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Editorial   / 2022 மே 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம்  செய்து கொள்வதாக கூறி பல இலட்சம் ரூபாயை சுருட்டிய  35 வயதுடைய நபரை பொலிஸார் புதுடெல்லியில் கைது செய்தனர். 

பெண் டாக்டர், அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் டாக்டரின் முறைப்பாட்டில்,

சந்தேகநபரான கானை, ஒன்லைனில் திருமண பதிவு மையத்தில்  சந்தித்​தேன்.  தன்னை இளங்கலை மற்றும்  அனாதை என்றும் அறிமுகப்படுத்தினார். தான் பொறியியலாளர்.  எம்.பி.ஏ படித்திருப்பதாகவும், சொந்தமாக தொழில் நடத்தி வருவதாகவும் கூறினார்.

அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும் கூறி,  தன்னிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அவருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதனையடுத்தே முறைப்பாடு செய்தேன் என்றும் பெண் டாக்டர் தெரிவித்துள்ளார்.

 கான், மேட்ரிமோனியல் போர்ட்டலில் பல போலி ஐடிகளை உருவாக்கி அதன் மூலம் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்களுடன் நட்பு வைத்திருப்பது விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.

அவர் கொல்கத்தாவில் இருந்து கண்காணிக்கப்பட்டு இறுதியாக வியாழக்கிழமை பஹர்கஞ்சில் உள்ள ஹோட்டல் ஒன்றில்​  வைத்து கைது செய்யப்பட்டார்,   

​ கான், 100க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .