Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி சட்டசபையில் இருந்து அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து, விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமையும் (25) ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டசபையில் போராட்டம் நடத்தினார்கள்.
எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டசபை தலைவர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை சட்டசபையில், செவ்வாய்க்கிழமை (25) தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவை சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பாஜகவினர் திங்கட்கிழமை (24) விளக்கமளித்திருந்தனர்.
முந்தைய ஆட்சியில் முதலமைச்சர் இருக்கைக்கு பின்புறம் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் தற்போது முதலமைச்சர் இருக்கைக்கு வலப்புறச் சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025