2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

12 நாட்களில் 16 பேரைக் கொன்ற யானை: அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 12 நாட்களில் 16 பேரை யானையொன்று கொலை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள  பகுதிகளில் அண்மைக்காலமாக ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வந்துள்ளது.

குறிப்பாக கடந்த 12 நாட்களில் மாத்திரம்  ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி பகுதிகளைச் சேர்ந்த 16 பேரைக் குறித்த யானை கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த யானையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2 ஆண்டுகளில் மாத்திரம் ஜார்கண்டில் யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி  133 பேர் இறந்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .