2025 மே 02, வெள்ளிக்கிழமை

15 வயது சிறுவன் சுட்டத்தில் 4 வயது சிறுவன் பலி; தாய் படுகாயம்

Freelancer   / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் ஒருவன், துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது  சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த சிறுவனின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம், மண்டியா பகுதி அருகேயுள்ள நாகமங்களாவில் மஞ்சுநாத் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை, ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 6 மணியளவில் 15 வயது சிறுவன் எடுத்து விளையாடியதாக தெரிகிறது. அப்போது தவறுதலாக சுட்டதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்

அத்துடன், அந்த சிறுவனின் 29 வயது தாயாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இது குறித்து நாகமங்களா பொலிஸார் 15 வயது சிறுவன் மீதும், துப்பாக்கியின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவன் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் பிள்ளை ஆகும். துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவனும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X