Editorial / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் காத்தி மோனிகா (வயது 29). இவருடைய கணவர் காத்தி சுரேஷ் (வயது 36). கார் டிரைவர். காதலித்து வந்த இவர்கள் இரண்டு பேரும், 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சுரேஷ் திடீரென உயிரிழந்து உள்ளார். அப்போது, அவருடைய உறவினர்களிடம் பாலியல் உறவின்போது அவர் மரணமடைந்து விட்டார் என மனைவி மவுனிகா கூறினார். எனினும், பொலிஸாரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடப்பு ஆண்டின் ஜனவரியில் இருந்து, பண தேவைக்காகவும், பிற விசயங்களுக்காகவும் மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்து உள்ளார். பணம் வர வர அது அவருடைய ஆசையை தூண்டியுள்ளது. இந்நிலையில், அஜய் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஆனால், மவுனிகாவின் கள்ளக்காதலுக்கு கணவர் சுரேஷ் இடையூறாக இருக்கிறார் என மவுனிகா நினைத்துள்ளார். அதுபற்றி அஜய்யிடம் கூறியுள்ளார். அவரோ, சுரேஷை தீர்த்து கட்டி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என யோசனை கொடுத்துள்ளார். இதற்காக ஒன்றல்ல இரண்டு முறை நடந்த சதி திட்டம் தோல்வியில் முடிந்து உள்ளது.
முதல் முயற்சியின்போது, கணவருக்கு 15 வயாகரா மாத்திரைகளை அசைவ உணவில் கலந்து கொடுத்துள்ளார். ஆனால், அதில் இருந்து ஏதோ வாடை வருகிறது என கூறி சாப்பிட மறுத்து விட்டார். இதனால், அவர் தப்பியுள்ளார். அடுத்து மற்றொரு யோசனையை அஜய் கூறியுள்ளார். இந்த முறை, சுரேஷின் மதுபானத்தில் தூக்க மாத்திரைகளையும், ரத்த கொதிப்பு மாத்திரைகளையும் மவுனிகோ பொடி செய்து கலந்து கொடுத்துள்ளார்.
அதனை மளமளவென குடித்த சுரேஷ் சுயநினைவின்றி சென்றிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில், சேலையை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி, மூச்சு திணற செய்து அவரை கொன்றிருக்கிறார். உயிரிழந்து விட்டார் என உறுதி செய்ததும் சுரேஷின் உறவினர்களை அழைத்திருக்கிறார். தாம்பத்ய உறவின்போது, அவர் மயக்கமடைந்து விட்டார் என பொய்யான தகவல்களை கூறியுள்ளார். இதனால் உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் முன்பே உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனை சந்தேக வழக்காக பதிவு செய்த போலீசார், விசாரணை செய்ததன் முடிவில், வழக்கின் பின்னணியில் பெரிய சதி திட்டம் உள்ளது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வழக்கில், மவுனிகா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அரிகே ஸ்ரீஜா, சந்தியா என்ற வெமுலா ராதா, அஜய், பொட்டுல சிவகிருஷ்ணா மற்றும் நல்லா தேவதாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையின்போது மவுனிகா போலீசாரிடம் கூறும்போது, தொடர்ந்து பணம் கேட்டு துன்புறுத்தி வந்த ஆத்திரத்தில், தொம்மட்டி அஜய்யின் அறிவுறுத்தலின்படி அவரை கொலை செய்ய முடிவு செய்தேன் என கூறினார்.
இவர்களில் ஸ்ரீஜாவும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சுரேஷ் கொலையில் உதவியாக இருந்த ராதாவும் பாலியல் தொழிலாளி ஆவார். அவர், மெடிக்கல் ஏஜன்சி ஒன்றின் உரிமையாளராகவும் உள்ளார்.
இதில், ஸ்ரீஜா மவுனிகாவின் உறவினர் ஆவார். அவரே, சிவகிருஷ்ணா மற்றும் ராதாவிடம் மவுனிகாவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளனர். வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளுக்கு கரீம்நகர் காவல் துறை உயரதிகாரி கவுஷ் ஆலம் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025