2024 மே 03, வெள்ளிக்கிழமை

20 ஆயிரம் புத்தகங்களே அமைச்சரின் சொத்து

Editorial   / 2024 மார்ச் 31 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருப்பவர் அம்மாநில முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசாக்.

2016-21 வரையிலான முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார்.கேரளத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் தாமஸ் ஐசாக், ’ஒரு யதார்த்த கம்யூனிஸவாதி’ என்றால் அது மிகையல்ல.

சொந்தமாக வீடு கிடையாது, கால் சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை, தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் எதுவுமில்லை. அரசியல் தலைவர்களுக்கு, ஒரு முன்னோடியாக வாழ்ந்து வருபவர் தான் டாக்டர் தாமஸ் ஐசாக்.

ஆனால், அவரிடம் எண்ணிலடங்கா செல்வம் குவிந்துள்ளது. அது அறிவுச்செல்வம்.   ரூ. 9.6 லட்சம் மதிப்பிலான சுமார் 20,000 புத்தகங்களை தன்னுடைய ஒரே சொத்தாக பேணிப் பாதுகாத்து வருகிறார்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை’ - என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்து வருபவர். இளைஞர்களின் வழிகாட்டி என்றே அழைக்கத் தோன்றுகிறது இவரை.

திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் வீடு, இல்லை, நூலகம் என்றழைத்தால் அது சாலச் சிறந்ததாகப் பொருந்தும், அங்கே மலைபோல குவிந்துள்ளன புத்தகங்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .