Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 23 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 க்கும் மேற்பட்ட பெண்களை, நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மொடல் அழகிகள் மூவர் வழங்கிய புகாரின் அடிப்படையிலே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள.
குறித்த புகாரில் ”எங்களோடு விளம்பர படங்களில் நடித்த நபர் ஒருவர், எங்களைக் காதலிப்பதாகக் கூறி திருமண ஆசைகாட்டி எங்களிடம் உடல் ரீதியாக உறவு வைத்து, பின்னர் லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தைப் பெற்று வந்துள்ளார். அவ்வாறு பணம் தர மறுத்தால் எங்களிடம் உறவு வைத்தபோது, ரகசியமாக எடுத்த படத்தைக் காட்டி, இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் பெற்றோருக்கு தெரிந்து விடும், என்று பயந்து இவ்விடயத்தை வெளியில் சொல்லாமல் நாங்கள் மறைத்து விட்டோம். எனினும நாங்கள் மூவரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, எங்களை அந்நபர் ஏமாற்றியதைக் தெரிந்து கொண்டோம்.
அத்துடன் அந்நபர் எங்களைப் போல் ஏராளமான பெண்களைத் தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்கள ஏமாற்றி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனவே பெண்களைத் தனது காம இச்சைக்கு பயன்படுத்தும் அந்த மனித மிருகத்தை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கவே இப் புகார் மனுவைக் கொடுத்துள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்து.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் நடத்திய தீவிர தேடுதலில் அந் நபர் கைது செய்யப்பட்டதுடன், விசாரணையில் குறித்த மோசடி மன்னனின் பெயர் முகமது செய்யது எனவும், அவர் பி.காம். பட்டதாரி எனவும் , அண்மைக் காலமாக விளம்பர படங்களில் நடித்து வருவதும் தெரிவந்துள்ளது.
அத்துடன் கடந்த 5 வருடங்கலாக இவ்வாறு பெண்களை ஏமாற்றி வந்ததாகவும், இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி அவர்களைத் தனது காதல் வலையில் விழவைத்து, அவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்து, அதனை வீடியோவாக எடுத்து இணைத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பெற்று வந்துள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago