2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

24 பெண்கள் நீரில் மூழ்கி பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலத்தில் ஜிவித்புத்ரியா பண்டிகையின்போது விரதம் இருந்து நீராடச்சென்ற பெண்கள் 24 பேர்,  நீரில் மூழ்கி பலியாகியிருப்பது  அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும்  இந்த மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஜிவித்புத்ரிகா பண்டிகையின்போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.

மூன்று நாள் உண்ணாவிரத முடிவில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் விரதத்தை  முடிப்பார்கள். அப்படி ஞாயிற்றுக்கிழமை (08) நடந்த  இந்த பண்டிகையின்போது நீர் நிலைகளில் நீராடிய  பெண்கள் 24 பேர் பலியாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X