2024 மே 03, வெள்ளிக்கிழமை

30 நகரங்களில் யாசகர் அவுட்

Mithuna   / 2024 ஜனவரி 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாசகம் பெறுவோர் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கலாசாரம், வரலாறு அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 30 நகரங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தேர்வு செய்துள்ளது.

வடக்கில் அயோத்தி, தெற்கில் திருவனந்தபுரம், கிழக்கில் குவாஹாட்டி, மேற்கில் திரிம்பகேஷ்வர் என நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த நகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா, மைசூரு உள்ளிட்ட நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த 30 நகரங்களிலும், ‘விளிம்புநிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளித்தல்’ (ஸ்மைல்) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 2026-ம் ஆண்டுக்குள் யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்காக, 30 நகரங்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் உதவியுடன் யாசகம் பெறும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

அதன் பிறகு யாசகம் பெறுவோர் மீட்கப்பட்டு, மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரத்துக்கு தேவையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .