Freelancer / 2023 ஜூலை 19 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவு தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் கடந்த 14 ஆம் திகதி செலுத்தப்பட்டது.
பின்னர் ஜூலை 17-ம் திகதியன்று 2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை தரைக் கட்டுபாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
அடுத்தக் கட்ட உந்துதல் பணி எதிர்வரும் 20-ம் திகதி (இன்று) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஓகஸ்ட் 23ம் திகதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திரயான் - 3, நிலவு தொடர்பான பல்வேறு ஆய்வு தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்ப உள்ளது.
4 minute ago
23 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
34 minute ago
40 minute ago