2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

40 சென்டி மீட்டர் பறந்த விக்ரம் லேண்டர்

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14-ம் திகதி நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

கடந்த  ஓகஸ்ட் 23ம் திகதி, சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து  விக்ரம்  எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து, நிலவை அடைந்து,  தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

 அவை  பூமிக்கு  அனுப்பும்  நிலவின்  புகைப்படங்களையும் அவ்வப்போது இஸ்ரோ  வெளியிட்டு  வருகிறது.  அந்த  வகையில்,  நிலவில்  தரையிறங்கிய விக்ரம்  லேண்டர்  சாதனம்  குறித்து  தற்போது  இஸ்ரோ அறிவித்திருப்பதாவது:

விக்ரம் லேண்டர், திட்டமிட்ட குறிக்கோளை தாண்டி சிறப்பாக செயல்படுகிறது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது.

கட்டளையிட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரைப்பரப்பிலிருந்து 40 சென்டி மீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டி மீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X