2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

7,000 பெண்கள் மானபங்கம்; அதிர்ச்சித் தகவல்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 30 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி :

 

மேற்கு வங்க தேர்தல் வன்முறையில், 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கத்துக்கு ஆளானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல்  காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து,எதிர்கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில் ,25 பேர் பலியாயினர்.

இந்த சம்பவம் குறித்து, 'கால் பார் ஜஸ்டிஸ்' என்ற சமூக அமைப்பு சார்பில், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது. இக்குழு ஆய்வறிக்கையை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கையளிக்கப்பட்டது.

இது குறித்து கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்துக்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்க்கட்சியினரையும், பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இதில், 25 பேர் பலியாகியுள்ளனர். 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X