Editorial / 2023 ஜூன் 30 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

71 வயது முதியவர் ஒருவர் தலையில் மாப்பிள்ளை தொப்பி அணிந்து திருமணம் செய்து கொள்ள தயார் என அரசு அலுவலகங்களில் சுற்றி வருகிறார்.
30 வயது தாண்டியும் தங்களுக்கு திருமணமாகவில்லையே என்று 90ஸ் கிட்ஸ் பலர் ஏக்கத்தில் தவிக்கும் காலத்தில் இங்கு ஒரு முதியவர் தனது 71ஆவது வயதில் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். அதுவும் பெண் வேண்டும் என அரசு அலுவலகங்களை சுற்றி வருகிறார். முதியவருக்கு இந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருவதற்கு ஒரு வினோத காரணம் உள்ளது.
ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சத்பீர் சிங். 71 வயதான சத்பீர் சிங்கின் மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். இவரது பிள்ளைகளோ டெல்லிக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.
தனது கிராமத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் தனியாக தங்கி வசித்து வரும் சத்பீருக்கு சமீப காலமாக அரசு நல திட்டங்கள் ஏதும் முறையாக கிடைக்கவில்லையாம். ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்திலும் குடும்பஸ்தர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏதும் சத்பீருக்கு கிடைப்பதில்லை. அரசு சலுகைகளுக்காக அலுவலகங்களின் படியேறி படியேறி அலுத்து போன சத்பீர் ஒரு கட்டத்தில் அதிரடி முடிவுக்கு வந்துவிட்டார்.
திருமணத்தின் போது மணமகன் தலையில் அணியும் அலங்கார தொப்பியை அணிந்து கொண்டு அரசு அலுவலகங்களில் வலம் வரும் சத்பீர் தான் திருமணம் செய்து மீண்டும் குடும்பதஸ்தானாக தயார் என்று சிக்னல் கொடுக்க ஆரம்பித்தார். முதியவரின் இந்த வினோத செயலால் திகைத்து போன அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என முதியவர் சத்பீருக்கு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
16 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
49 minute ago